தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன் “தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, சேலம், தருமபுரி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிற மாவட்டங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 17ஆம் தேதிமுதல் படிப்படியாக மழை குறையும். சென்னையில் இன்று மழை இருக்கும். ஆனால் இந்த அளவிற்கு நாளை இருக்காது” எனத் தெரிவித்தார்.