தமிழ்நாடு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

JustinDurai

வடகிழக்கு பருவமழை, தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19-ம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மாலத்தீவு பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 18 செ.மீ. மழையும், மணிமுத்தாறில் 16 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை ஆனது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19-ம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.