தமிழ்நாடு

செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு

செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு

webteam

செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய ஜல்சக்தித் துறை தெரிவித்துள்ளது.

நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 22 அடியை நெருங்க உள்ளது. இதனால் இன்று மதியம் 12 மணியளவில் முதல்கட்டமாக 1000 கன அடி நீரை வெளியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய ஜல்சக்தித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “செம்பரம்பாக்கம் பகுதியில் நாளை காலை 6 மணிக்குள் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருக்கும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளது.