தமிழ்நாடு

வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Rasus

வடதமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த (அக்டோபர்) மாதம் 27-ந் தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால் இந்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன்‌ காணப்படும் என்றும், இரவு நேரங்களில் மழை‌ பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.