தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை அநேக இடங்களில் சேலசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, வடபழனி, போரூர், முகலிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது.