தமிழ்நாடு

4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

webteam

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆந்திர மாநிலம் கடலோர‌ பகுதி முதல் கன்னியாகுமரி கடல் வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மழை தொடர்ந்து 4 நாட்களுக்கு பெய்யும் எனவும், வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகாலையிலும் லேசான மழை பெய்தது. இதனால் வெயிலின் கொடுமை நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.