தமிழ்நாடு

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Rasus

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காற்றின் வேக மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக பிற மாவட்டங்களிலும் லே‌சான ‌மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அனேக இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.