தமிழ்நாடு

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் அதீத கன மழை - இந்திய வானிலை மையம்

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் அதீத கன மழை - இந்திய வானிலை மையம்

Rasus

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் அதீத கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் அதீத கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 35 சென்டி மீட்டர் மழையும் மேல் பவானியில் 19 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. குளித்தலையில் 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.