கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, சௌராஷ்ட்ரா வர்த்தக சங்கத்தின் மூத்த இயக்குநரும் மனித உரிமை ஆலோசகருமான கே.வி.பாலா, 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார். அப்போது அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் கே.கே.கோவிந்தமூர்த்தி, முதுநிலை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்தபோது, இந்த காசோலையை அவர் வழங்கியிருக்கிறார்.
பி.வி.கே. குழுமத்தின் தலைவரான இவர், நிவாரண தொகையை அளிக்கும்போது, நிறுவனத்தின் துணை தலைவர் கோவிந்தமூர்த்தி, முதுநிலை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.