தமிழ்நாடு

சங்கிலி பறிப்பு சம்பவத்தின்போது கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

சங்கிலி பறிப்பு சம்பவத்தின்போது கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

webteam

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே செயின் பறிப்பு சம்பவத்தின் போது நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மல்லிகா. இவர்  தனது கணவருடன்‌ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு பேர் அவரது செயினை அறுத்து சென்றனர். இதில் நிலைதடுமாறிய மல்லிகா இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் மல்லிகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  மல்லிகா உயிரிழந்தார். ‌வழிப்பறி தொடர்பாக மகி என்கின்ற மகேந்திரன், காத்தவராயன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.