CEO நியமனம்
CEO நியமனம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு CEO நியமனம்..!

ஜெனிட்டா ரோஸ்லின்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு பார்த்தீபனை CEO ஆக நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கோயம்பேடு பகுதி, ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது கலைஞர் நூற்றாண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தலைமை நிர்வாக அலுவலராக ஜெ.பார்த்தீபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நில நிர்வாக ஆணையரகத்தில் இணை ஆணையராக இருந்த பார்த்தீபன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது கிளாம்பாக்க பேருந்து நிலையத்தின் CEO ஆக நியமித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

14 நடைமேடைகள், ஒரே நாளில் 2,300 பேருந்துகள் வந்து செல்லக்கூடிய வசதி என்று பல்வேறு சிறப்பம்சங்களுடன் புழக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துகள் முறையாக வருவதை உறுதி செய்யவும், பயணிகளுக்கு சிரமம் இல்லாத நடவடிக்கைகள் மேற்கொள்வதை கண்காணிக்கவும் ஜெ.பார்த்தீபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.