தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்க வேண்டும் என்பது பற்றி தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு சில இடங்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும், மருத்துவமனை எங்கு அமைப்பது என்பது பற்றி தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.