தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் உயர்வு..!

சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் உயர்வு..!

webteam

கோடை விடுமுறை நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நடைமேடை கட்டணம் 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், நடைமேடை கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய ரயில் நிலையங்களில் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக, நடைமேடை கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு ரயில்வே போர்டு அனுமதியளித்துள்ளது.

இதன்படி, கோடைக்காலத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 3 மாதத்திற்கு அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனிடையே நடைமேடை கட்டண உயர்வுக்கு ரயில்வே பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்காலிக உயர்வுதான் என்றாலும், அது தேவையில்லை. மக்கள் சிரமப்படுவார்கள் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.