தமிழ்நாடு

'வாட்ஸ் அப்பின் விளக்கம் போதுமானதாக இல்லை' - ரவிசங்கர் பிரசாத்

'வாட்ஸ் அப்பின் விளக்கம் போதுமானதாக இல்லை' - ரவிசங்கர் பிரசாத்

webteam

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக வாட்ஸ் அப் நிறுவனம் அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

வதந்தி மற்றும் தவறான தகவல்களை வாட்ஸ்அப்பில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது என்றும், தனது விளக்கத்தில் வாட்ஸ்அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரவிசங்கர் பிரசாத், “தவறான தகவல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை மிக அவசியம். வாட்ஸ்அப் நிறுவனம் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வன்முறை பரப்பப்படுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை வாட்ஸ்அப் நிறுவனம் கண்டறிதல் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.