உணவு பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் விதிகளில், வீட்டில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்பவர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், ஆண்டிற்கு 1 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள், 3 அறைகள் கொண்ட கான்கிரீட் வீடு உள்ளவர்கள், சொந்த பயன்பாட்டுக்கு கார் வைத்திருப்பவர்கள் என பட்டியல் நீள்கிறது. இந்த விதிகளுக்குள் வருபவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது என்று மத்திய அரசு. இந்நிலையில் உணவு பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் விதிகள், தமிழகத்திற்கு பொருந்தாது. குடும்ப அட்டைகளை நீக்குவதற்கான அடிப்படை விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது'' என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.