மதுரை எய்ம்ஸ் கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும்? மத்திய அரசு சொன்ன தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

PT WEB

மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில், தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

இந்நிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் இருந்துவரும் நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டிமுடிக்கப்படும் என்ற கேள்வி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ்

அதற்கு பதிலளித்திருக்கும் மத்திய அரசு 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்டிஐ-ல் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட பணிகள் தொடக்கம்..

மதுரை எய்ம்ஸ்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு விளக்கமளித்திருக்கும் மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையானது 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், முதற்கட்டமாக ரூ.1,118.35 கோடிக்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும், அடுத்த 33 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் விளக்கமளித்துள்ளது.