ஜிஎஸ்டியில் மாநிலத்திற்குரிய பங்கினை உரிய நேரத்தில் மத்திய அரசு வழங்காததால் தமிழகம் பாதிப்பை சந்தித்து வருவதாக ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டியை பொறுத்தவரை 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்கள் மீதான வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஜிஎஸ்டியில் மாநிலத்திற்குரிய பங்கினை உரிய நேரத்தில் மத்திய அரசு வழங்காததால் தமிழகம் பாதிப்பை சந்தித்து வருவதாக ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார். 2017-18-ஆம் ஆண்டி கிடைக்க வேண்டிய 5 ஆயிரத்து 454 கோடியும், இழப்பீட்டுத்தொகை ஆயிரத்து 760 கோடியும் வழங்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பழைய வரிவிதிப்பு முறையிலிருந்து புதிய முறைக்கு மாறுவதில் ஏற்பட்ட சிக்கல்களைத் திடறம்படக் கையாண்டு, தமிழகம் வெற்றிகரமாகச் ஜி.எஸ்.டியை செயல்படுத்தி இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய ஆளுநர், திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலை கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும் என பொங்கல் பரிசு அறிவித்தார்.