தமிழ்நாடு

வேதாரண்யத்தில் மத்திய அதிதீவிர விரைவுப் படை ஆய்வு : காவல்துறையுடன் ஆலோசனை

webteam

வேதாரண்யத்தில் கலவரங்களின் போது கூட்டத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட ஆலோசனைகளை மத்திய அதிதீவிர விரைவு படையினர் மேற்கொண்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் காவல் உட்கோட்ட பகுதிகளில் ஆய்வு பணி மேற்கொள்ளவும், தகவல்களை சேகரிக்கவும் கோவையிலிருந்து 105 பட்டாளியனைச் சேர்ந்த 35 பேர் வருகை தந்தனர். துணைக் காமாண்டர் சிங்காரவேலு தலைமையில் வந்த மத்திய அதிதீவிர விரைவுப்படை வீரர்கள் வந்த அவர்கள், வேதாரண்யம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு சென்று ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனையில் காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படும் இடங்கள், மக்கள் தொகை விபரங்கள், மதக்கலவரம், சாதிய மோதல்கள், இயற்கை சீற்றங்கள் போன்ற தகவல்களை காவல்துறையினரிடமிருந்து சேகரித்து கொண்டனர். அத்துடன் கலவரங்களின் போது கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்தல், மனித உரிமை மீறல் இல்லாமல் கலவரத்தை தடுத்தல், பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும் காவல்துறையினருக்கு மத்திய அதிவிரைவு படையினர் அறிவுரை வழங்கினர். கோடியக்கரை பகுதியில் அன்னியர் நடமாட்டம், தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.