தமிழ்நாடு

ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

webteam

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2020 பிப்ரவரி 15-ல் அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்த பேச்சு, பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி சர்ச்சையானது. இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்திருந்தார். அதேசமயம் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து சமீபத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.


எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு  மே 31 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.