தமிழ்நாடு

தமிழகத்திற்கு ரூ.1,748 கோடி வறட்சி நிவாரணம்

தமிழகத்திற்கு ரூ.1,748 கோடி வறட்சி நிவாரணம்

webteam

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ஆயிரத்து 748 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழகத்திற்கு வந்து வறட்சியைப் பார்வையிட்டு சென்ற மத்தியக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வறட்சி நிவாரணமாக 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கக் கோரி இருந்த நிலையில், தற்போது ஆயிரத்து 748 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை ஈடுகட்ட இந்த நிவாரணத் தொகை போதாது என டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரவித்துள்ளனர்.