உதயநிதி ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் கோப்புப் படம்
தமிழ்நாடு

"உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.." தலைமை நீதிபதிக்கு 262 பிரபலங்கள் கடிதம்

சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 200-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

PT WEB

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கவேண்டும்’ எனப் பேசியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 200க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர்.