தமிழ்நாடு

திண்டாட்டத்திலும் கொண்டாட்டம்: சென்னை சாலை நீரில் மீன்பிடித்து விளையாடும் இளைஞர்கள்

திண்டாட்டத்திலும் கொண்டாட்டம்: சென்னை சாலை நீரில் மீன்பிடித்து விளையாடும் இளைஞர்கள்

kaleelrahman

ஆவடி அருகே சாலையில் மீன்பிடிக்க கைகளில் கட்டைகளுடன் காத்திருக்கும் இளைஞர்கள். மீன்பிடி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கொட்டி வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி பிரதான சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், ஆவடியை அடுத்தள்ள அண்ணனூர் ரயில் நிலைய சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், கைகளில் கட்டைகளுடன் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீன்களை வேட்டையாட காத்திருக்கும் காட்சிகளும், கட்டையால் தாக்கி மீன்களை லாவகமாக பிடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மழை பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தங்களது கவலையை மறக்க இளைஞர்கள் ஆனந்தமாய் மீன்களை வேட்டையாடி வரும் நிகழ்வு ரசிக்கும்படியாக உள்ளது.