சென்னையில், மூதாட்டி ஒருவர் மீது மாநகர பேருந்து மோதிய விபத்தின் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
புரசைவாக்கம் வெங்கடேச பக்தன் தெருவைச் சேர்ந்தவர் வத்சலா. இவர் கடந்த 7ஆம் தேதி பெரம்பூருக்கு வந்திருந்தார். அங்கு போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையை இவர் கடக்க முயன்றார்.
அப்போது மாநகர பேருந்து ஒன்று அவர் மீது மோதியதில், அந்த மூதாட்டி பேருந்து சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் வத்சலாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய பேருந்து ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.