சாமி நகை திருட்டு
சாமி நகை திருட்டு புதியதலைமுறை
தமிழ்நாடு

‘இதுதான் தொழில்பக்தியா..?’ - சாமி கும்பிட்டுவிட்டு அம்மனிடமே திருட்டு.. அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

யுவபுருஷ்

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியில் ஆனைகுலத்தம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவது போல் வந்த மர்ம நபர் ஒருவர், அம்மன் சிலையில் இருந்த தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளார்.

arrest

இதில் வினோதம் என்னவெனில், கோவிலுக்கு வந்தவுடன் அங்கிருந்த விபூதியை பூசிக்கொண்டு சாமி கும்பிட்டவர், அங்கிருந்த 2 வாழைப்பழங்களில் ஒன்றை எடுத்து சாப்பிடுகிறார். சட்டென எழுந்து அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகளை பறித்துவிட்டு மறுபடியும் அமர்ந்து நெற்றியில் விபூதி பூசிக்கொள்கிறார். மீதம் இருந்த ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு, கையெடுத்து கும்பிடுகிறார். இதற்கிடையில் தான் அணிந்திருந்த, மாலையை அங்கிருந்த தட்டில் கழட்டி வைத்துவிட்டு, மறுபடியும் கையெடுத்து கும்பிடுகிறார் அவர்.

எழுந்து நின்று கடைசியாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு, சுற்றிமுற்றிலும் யாரும் பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டு, வெளியே சென்ற அவரது காட்சிகள் அனைத்தும் சிசிடியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், ‘செய்வது திருட்டு, இதில் பக்தி வேறா’ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை வைத்து வேலூர் தெற்கு காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.