தமிழ்நாடு

ஃபேக்ட்டரிக்குள் நுழைந்து ஜாலியாக சாக்லெட் சாப்பிடும் கரடி - வெளியான சிசிடிவி காட்சிகள்

webteam

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள தனியார் ஹாேம் மேட் சாக்லெட் (HOME MADE CHOCOLATE) தயாரிக்கும் ஃபேக்ட்டரிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த சாக்லெட்களை உண்டு செல்வது தொழிற்சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள ஹை பீல்டு பகுதியில் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, சாக்லெட் தொழிற்சாலையின் கதவை உடைக்க முயற்சிக்கிறது.

அது திறக்காததால் அருகில் இருந்த வேறு வழியாக தடுப்பு சுவர் மீது ஏறி தொழிற்சாலைக்குள் நுழைந்த கரடி அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருநத சாக்லெட்களை உண்டுவிட்டு சென்றுள்ளது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அங்கிருந்து மீண்டும் தேயிலைத் தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் அந்த கரடி சென்றது. இந்த காட்சியானது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இங்கு உலா வரும் சிறுத்தை மற்றும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.