தமிழ்நாடு

கன்னியாகுமரியில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட மூதாட்டி - வீடியோ

கன்னியாகுமரியில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட மூதாட்டி - வீடியோ

webteam

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் கங்கை அம்மாள்(75). இவர் நாகர்கோவில் அருகே இடலாக்குடி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு திரும்பிய போது கங்கை அம்மாள் சாலையை கடக்கும் சூழலில் நாகர்கோவில் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவரின் இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் ரோட்டில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி. சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து அருகில் உள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டார் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றினர். மேலும் விபத்துக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.