இரண்டு ஆண்டுகளில் விரைவு மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என ஐசிஎப் முதன்மை எலக்ட்ரிக்கல் பொறியாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
ஐசிஎஃப் உற்பத்தி சாதனை மற்றும் எதிர்கால திட்டம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஐசிஎஃப் பொதுமேலாளர் மணி, திரிவேதி, உதயகுமார் ஆகியோர் பங்கேற்று சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து விளக்கமளித்தனர். டிசம்பர் முதல் ஐசிஎஃப் தொழில்நுட்பத்தை கைவிட்டு ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளூர் மூலபொருள்களை கொண்டு ரயில்பெட்டிகள் தயாரிக்கப்படும். மேலும் 2016-17 ஆண்டில் 2277 இரயில் பெட்டி தயாரிக்கப்பட்டது. இது 2015ம் ஆண்டிவிட 15 சதவீகிதம் அதிகம் எனவும் எதிர்வரும் ஆண்டில் மேலும் உற்பத்தியை அதிகரித்து தரமானதாகவும் மக்களுக்கு அதிக பாதுகாப்பு வசதியுடனும் தயாரிக்கப்படும் எனவும், இரண்டு ஆண்டுகளில் விரைவு மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் கண்காணிப்பு கேமரா முழுவதுமாகப் பொருத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.