தமிழ்நாடு

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா - பட்ஜெட்டில் அறிவிப்பு

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா - பட்ஜெட்டில் அறிவிப்பு

webteam

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என பட்ஜெட்டில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2020-2021-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதில், அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “ சிறைத்துறைக்கு ரூ. 329.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறைக்கு ரூ. 8,876.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4,997 விசைப்படகுகளில் ரூ. 18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ. 500 கோடியும், மின்சாரத்துறைக்கு ரூ. 20,115.58 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்புக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.