சிபிஎஸ்இ பள்ளி வளாகத்துக்குள், ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில், பாடப் புத்தகங்கள், சீருடைகள், கருவிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வணிக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.எஸ்.இ.வாரியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகத்திற்கு உட்பட பகுதிகளில் என்.சி.இ.ஆர்.டி. பாட புத்தகங்களை விற்பனை செய்யலாம் என்றும், மாணவர்களுக்கு தேவைப்படும் மற்ற ஸ்டேஷனரி பொருட்களை வாங்க, கடைகளை திறக்கலாம் என்றும் சி.பி.எஸ்.இ.வாரியம் தெரிவித்துள்ளது.