CBI-TN Govt
CBI-TN Govt File Photo
தமிழ்நாடு

'இனி விசாரணை மேற்கொள்ளும் முன் எங்களது அனுமதியை சிபிஐ பெறவேண்டும்' - தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு

PT WEB

மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, {Delhi Special Police Establishment Act, 1946 (Central Act XXV of 1946)}-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது.

இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறை நேற்று தலைமைச் செயலகத்தில் அனுமதி இல்லாமல் சோதனை நடத்தியதன் காரணமாகவே தற்போது சிபிஐ அனுமதி ரத்து செய்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.