புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு தொடர்ந்த நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி இயக்குநரிடம் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரியில் சென்டாக் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில் முறைகேடு நடந்ததாக அங்கு ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சிபிஐ அதிகாரிகளுக்கு விசாரணை நடத்த பரிந்துரை செய்தார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் சென்டாக் மையத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவனங்களை கொண்டு சென்றனர். இதன் பின்பு சுகாதார செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரிபாபு, சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தது.
இதனையடுத்து சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், அரசு மருத்துவ கல்லூரி இயக்குநர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 5 அதிகாரிகள் தங்களை கைது செய்வதில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கு பெற்றனர். இந்நிலையில் 10 தினங்களுக்கு முன்பு புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக பிணையில் வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்த 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் கல்லூரி இயக்குநர் கோவிந்தராஜிவிடம் விசாரணை செய்தனர். ஜூலை மாதம் சென்டாக் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் இருக்கும் ஆவணங்களை சரிபார்த்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.