நாகை மாவட்டத்தில் சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை கருணைக்கொலை செய்திடக் கோரி, ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர்.
நாகூரை அடுத்து பனங்குடியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் அமைய நிலம் வழங்கிய 100-க்கும் அதிகமானோர், 26 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றினர். கடந்த ஏப்ரல் மாதம் ஆலை விரிவாக்கத்திற்காக சுத்திகரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதனால் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டதால், பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், குறைதீர்க்கும் நாள் முகாமுக்காக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். தங்களை கருணை கொலை செய்திடக் கோரி, ஆட்சியர் பிரவின் நாயரிடம் மனு அளித்ததால் பரபரப்பு நிலவியது. இடத்தையும் கொடுத்து வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் தங்களை கருணை கொலை செய்திடுமாறு அவர்கள் வேதனையுடன் கூறினர்.