துரைமுருகன்
துரைமுருகன் pt web
தமிழ்நாடு

”காவிரி நீர் விவகாரம்; தமிழக எம்பிக்கள் குழுவிடம் மத்திய அமைச்சர் இதை உறுதியாக சொன்னார்”-துரைமுருகன்

PT WEB

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். மத்திய அமைச்சர் உடனான சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், கர்நாடகா அரசிடம் 54 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தும் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி நீரை சேமித்து வைத்துள்ளதாக கூறினார்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நீரைக் காட்டிலும் குறைந்த அளவிலான நீரை மட்டுமே தற்போது வரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு விடுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்திலும் காவிரி நீர் குடிநீராக பயன்படுவதாக தெரிவித்த துரைமுருகன், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படும் என்றும் கூறினார்.