தமிழ்நாடு

வேதாரண்யம் கடைமடையில் காவிரி - விவசாயிகள் மகிழ்ச்சி

வேதாரண்யம் கடைமடையில் காவிரி - விவசாயிகள் மகிழ்ச்சி

webteam

மேட்டூரில் தண்ணீர் திறந்து 11 நாட்களுக்கு பிறகு வேதாரண்யம் கடைமடைப்பகுதியான அடப்பாற்றில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் கடைமடைப் பாசனப்பகுதிக்கு அரிச்சந்திராநதியிலிருந்து பாமிணி அருகே பிரியும் அடப்பாறு சலக்கடை, சாக்கை வழியாக உம்பளச்சேரி வருகிறது. இதன் மூலம்; துளசாபுரம் சாக்கை, உம்பளச்சேரி, கரியாப்பட்டினம் ஆகிய கிராமங்களில் சுமார் மூவாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

அடப்பாற்றில் சில இடங்களில் குடிமராமத்து பணிகள் முடிவடையாததால் கடந்த 19-ம் தேதி கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேரடி நெல் விதைப்பு செய்திருந்த விவசாயிகள் சம்பா சாகுபடி பாதிக்குமோ என கவலையடைந்தனர் இந்த நிலையில் தண்ணீர் வரும் பாதையில் இருந்த இடையூறுகள் சரி செய்யப்பட்டு ஆடப்பாற்றில் தண்ணீர் வந்தது இதையடுத்து இன்று சாக்கை சட்ரஸ் திறக்கப்பட்டு உம்பளச்சேரி வடக்குராஜன் வாய்கால், மகாராஜபுரம் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல துவங்கியது பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வந்ததால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்