தமிழ்நாடு

காவிரி ஆணையம்: தமிழக உறுப்பினர்கள் பெயர் பரிந்துரை

காவிரி ஆணையம்: தமிழக உறுப்பினர்கள் பெயர் பரிந்துரை

Rasus

காவிரி மேலாண்மை ஆணையம், மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க உள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம், மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரபாகரன் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் குமார் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது.