தமிழ்நாடு

2007-ல் வெளியான காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் விவரம்: கேட்டதும்.. கொடுத்ததும்..!

2007-ல் வெளியான காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் விவரம்: கேட்டதும்.. கொடுத்ததும்..!

Rasus

காவிரி நடுவர் மன்றத்தில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி கேட்ட நீரின் அளவும், இறுதி உத்தரவும் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

தமிழகத்தின் பிரதான பிரச்னைகளில் ஒன்றான காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் நீண்ட கால பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. அந்த மனுக்கள் மீதுதான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்நிலையில் காவிரி நடுவர் மன்றத்தில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி கேட்ட நீரின் அளவும், இறுதி உத்தரவும் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

கர்நாடகத்திலிருந்து 264 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தமிழகம் கேட்டது. ஆனால், நடுவர் மன்றம் அளித்தது 192 டிஎம்சி. கேரளா கேட்ட தண்ணீர் 99.8 டிஎம்சி, ஆனால் வழங்க உத்தரவிடப்பட்டது 30 டிஎம்சி. புதுச்சேரி கேட்ட நீரின் அளவு 9.3 டிஎம்சி, நடுவர் மன்றம் உத்தரவிட்ட நீர் அளவு 7 டிஎம்சி. இப்படி கேட்டதும் கிடைத்ததுமாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வெளியானது.

அதை மத்திய அரசிதழில் வெளியிடக் கோரி 2007 மார்ச் 18ஆம் தேதி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். அரசிதழில் தீர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், ஆண்டுதோறும் தமிழகத்துக்கு கர்நாடகா 192 டிஎம்சி காவிரி நீர் தர வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை ஏற்க மறுத்த கர்நாடகத்தால் மீண்டும் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குப் போனது.