தமிழ்நாடு

“கோதாவரி-காவிரி நதிநீர் இணைக்கப்படும்” - முதல்வர் பழனிசாமி உறுதி

“கோதாவரி-காவிரி நதிநீர் இணைக்கப்படும்” - முதல்வர் பழனிசாமி உறுதி

webteam

கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும் என்றும், கடலில் கலக்கும் உபரிநீரைத் தடுக்க தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். 

கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு மூலம் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பதாலேயே அத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், வேளாண் மக்கள் பயன்பெறும் வகையில், உணவுப் பூங்கா, கால்நடை பூங்கா, குளிர்சாதன கிடங்கு ஆகியவை கொண்டுவரப்படும் எனக் கூறினார். விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் கொடுப்பதாக கூறிய திமுக, மக்களிடம் இருந்து நிலத்தை வாங்கிக் கொண்டார்கள் என விமர்சித்தார்.