தமிழ்நாடு

காதலித்துவிட்டு சாதியை காட்டி திருமணத்திற்கு மறுக்கும் இளைஞர்: கர்ப்பிணி புகார்

காதலித்துவிட்டு சாதியை காட்டி திருமணத்திற்கு மறுக்கும் இளைஞர்: கர்ப்பிணி புகார்

Rasus

காதலித்துவிட்டு சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் காரையூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்குமார். லால்குடியை சேர்ந்தவர் சங்கீதா. இருவரும் காதலித்து வந்துள்ளனர். தற்போது சங்கீதா 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சங்கீதா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பதுடன், சாதியை சொல்லி திட்டுவதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சங்கீதா திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

சாதியை காரணம் கட்டி திருமணம் செய்ய மறுக்கும் சதீஷ்குமார் மீதும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார்.