தமிழ்நாடு

ஸ்டெர்லைட் - அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து

Sinekadhara

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமாக அரசியல் தலைவர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிவர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகளில் சிபிஐ வசம் இருக்கும் ஒருசில வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமாக அரசியல் தலைவர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வைகோ, நல்லகண்ணு, கே.பாலகிருஷ்ணன், டிடிவி தினகரன், பிரேமலதா, எல்.கே சுதீஷ், அனிதா ராதாகிருஷ்ணன், அழகு முத்துப்பாண்டியன், ஜென்றி தாமஸ் உள்ளிட்டோரின் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 38 வழக்குகளில் தொடர்புடைய 13 அரசியல் தலைவர்களின் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.