தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்குவது தொடர்பாக மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்கள் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் எவ்விதமான தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை எனவும், சமூகத்தை பாதிக்கும் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார்.
சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்கி, சான்றிதழை பெற்ற தொடர்கள், விளம்பரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் மனுதாரர் கேட்டுக் கொண்டார். இது குறித்து பதில் அளிக்க மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.