தமிழ்நாடு

அற்பத்தனமான நடவடிக்கை: கனிமொழி காட்டம்

அற்பத்தனமான நடவடிக்கை: கனிமொழி காட்டம்

Rasus

அரசு கேபிளில் 124-வது இடத்திலிருந்து புதிய தலைமுறையை 499-ம் இடத்துக்கு தள்ளியிருப்பது, அற்பத்தனமான நடவடிக்கை என திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி, “ புதிய தலைமுறை சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயலாகும். அரசு கேபிளில் 124வது இடத்திலிருந்து புதிய தலைமுறையை 499ம் இடத்துக்கு தள்ளியிருப்பது, அற்பத்தனமான நடவடிக்கை. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக செயல்பட்ட பல சர்வாதிகாரிகளுக்கு வரலாறு சரியான பாடம் புகட்டியுள்ளது.  எடப்பாடி பழனிசாமி அதிலிருந்து உரிய பாடம் கற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோவையில் நடைபெற்ற வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மீது காவல்துறையினரின் வழக்குப்பதிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸில் 124-வது இடத்தில் இருந்த புதிய தலைமுறை 499-வது இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி சேனல் வரிசையில் இருந்த புதிய தலைமுறை பிறமொழி சேனல் வரிசையில் பின்னுக்கும் தள்ளப்பட்டுள்ளது.