தமிழ்நாடு

சாதி கேட்ட விவகாரம் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது புகார் மனு

சாதி கேட்ட விவகாரம் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மீது புகார் மனு

webteam

செய்தியாளரிடம் எந்தச் ஜாதி என்று கேள்வி எழுப்பிய புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். தேர்தல் முடிவுகள் குறித்து நுங்கம்பாக்கத்திலுள்ள தன்னுடைய தலைமை அலுவலகத்தில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகங்களை அவர் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், கேள்வி எழுப்பிய செய்தியாளரை நோக்கி, ‘நீ என்ன மாவட்டம்? எந்தச் சாதி’ எனக் கிருஷ்ணசாமி கேட்டார். அதனால், செய்தியாளர்களுக்கும், அவருக்கும் இடையே கடுமையான சலசலப்பு ஏற்பட்டது.  

இந்நிலையில், செய்தியாளரிடம் எந்தச் சாதி என்று கேள்வி எழுப்பிய புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது செய்தியாளர்களை சாதிய ரீதியாகவும், ஒருமையிலும் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பாக சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணசாமி மீது புகார் பதிவு நகல் வழங்கப்பட்டது.