தமிழ்நாடு

கொரோனா தனிமைப்படுத்தலை மீறி வெளியே சுற்றிய 40 பேர் மீது வழக்கு

கொரோனா தனிமைப்படுத்தலை மீறி வெளியே சுற்றிய 40 பேர் மீது வழக்கு

webteam

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வெளியே சுற்றிய 40 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நபர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அறிகுறியும் இன்றி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 40 நபர்கள் வெளியே சுற்றியதால் அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. திருவொற்றியூரைச் சேர்ந்த 4 பேர், ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தலா 7 பேர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களைச் சேர்ந்த தலா 3 பேர் என மொத்தம் 40 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

இதுபோன்று வேறு யாராவது இனிமேல் வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களும் கொரோனா மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.