தமிழ்நாடு

ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

webteam

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உட்பட 2 ஆயிரம் பேர் மீது‌ காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தியது மற்றும் சட்டவிரோதமாக கூடியது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தான் தாக்கப்பட்டதாக கூறி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இவர்களோடு 63 எம்எல்ஏக்களும் 3 எம்பிக்களும் பங்கேற்றனர். இதோடு 2 ஆயிரம் திமுகவினரும் இதில்‌பங்குகொண்டனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.