அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அதிமுக சட்டமன்றக் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது எம்எல்ஏக்களை கடத்தி சிறை வைத்ததாக கூவத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூவத்தூர் காவல்நிலையத்தில் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் அடைத்து வைத்திருந்ததாகவும், அங்கிருந்து மாறுவேடத்தில் தான் தப்பி வந்ததாகவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கூவத்தூர் காவல்நிலையத்தில் ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏவான சரவணன், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து கடந்த 13ம் தேதி ஆதரவு தெரிவித்தார்.