தமிழ்நாடு

புதிய தலைமுறை மீது வழக்கு: எம்எல்ஏ கருணாஸ் கடும் கண்டனம்

புதிய தலைமுறை மீது வழக்கு: எம்எல்ஏ கருணாஸ் கடும் கண்டனம்

Rasus

புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எம்எல்ஏ கருணாஸ் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களாலா? என்ற தலைப்பில் கோவையில் புதிய தலைமுறையின் சார்பில் நடைபெற்ற வட்டமேசை விவாதம் தொடர்பாக புதிய தலைமுறை மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெற்ற அரங்க மேலாளர் ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எம்எல்ஏ கருணாஸ் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் இயக்குநர் அமீர் மீது வழக்குப்பதிவு என்பது கருத்துச் சுதந்திரத்தை கொலைசெய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு தமிழக காவல்துறை துணைபோகும் செயல் அன்றி வேறொன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.