விசிக தலைவர் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உசிலம்பட்டியை சேர்ந்த செளத்ரி என்ற நபர், தனது சமூக வலைதள பக்கத்தில் விசிக குறித்து அவதூறாக கருத்துகளை வெளியிட்டதுடன் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் கருத்து பகிர்ந்ததாக விசிக நிர்வாகி கண்ணன் மதுரை எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்தார்.
தரவுகளை ஆய்வு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.