சேலம் வழியாக சென்ற ரயிலில் தடையை மீறி கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த ஐயப்ப பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சபரிமலை யாத்திரை சீசன் தொடங்கிய நிலையில் ரயில்களில் கற்பூரம் ஏற்றக்கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், திருப்பதியில் இருந்து சேலம் வழியாக கொல்லம் சென்ற ரயிலில் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இது தொடர்பான காட்சிகள் வெளியான நிலையில், பக்தர்கள் மீது சேலம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடித்து திரும்பிய பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.