விழுப்புரத்தில் அரசு கட்டுப்பாட்டுகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்பட 3 ஆயிரத்து 500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை கண்டித்து விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கொரோனா விதிகளை மீறி போராட்டம் நடத்தியதாக 3 ஆயிரத்து 500 பேர் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.