திமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெற்று, அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியிருந்தது.
இந்நிலையில் இத்த்திட்டத்திற்காக திமுக, பள்ளி மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்குவதாக கூறி எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், அடுத்த வாரம் முறையிட அறிவுறுத்தியுள்ளனர்